தன்னுடைய கள்ளக்காதலைத் தொடர்ந்து கண்டித்து வந்த கணவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து அதிர வைத்திருக்கிறார் மனைவி. கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிங்கனோடி தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு நாயக்(38).
பாஜக பிரமுகரான இவரது மனைவி சினேகா(26). இவர்களது கிராமத்தில் கோயில் கோபுரம் கட்டும் பணிக்காக வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள வந்திருந்தனர். இதில் ஒருவருடன் சினேகாவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சினேகாவின் இந்த பழக்கத்தினால், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகாத உறவைக் கைவிடுமாறு தனது மனைவியிடம் வலியுறுத்தினார். அதையும் மீறி சினேகா, வடமாநில தொழிலாள்லியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரைக் கொலை செய்ய முடிவு செய்த சினேகா, ராஜு நாயக் குடிக்கும் மதுவில் நேற்றிரவு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைப் போட்டுள்ளார்.
அதைக் குடித்த ராஜு நாயக் சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார். கணவர் மயங்கி விழுந்ததும், அவரது கழுத்தை நெரித்து சினேகா கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று ராஜு நாயக் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சினேகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.