கள்ளக்காதல் மோகம்.. காதலனுடன் சேர்ந்து குழந்தைகளை அடித்து துன்புறுத்திய கொடூர தாய்க்கு நேர்ந்த சோகம்!!

306

குமரி மாவட்டம் பள்ளியடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரியா (வயது 39). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு குமார் வேலைக்காக வெளியூர் சென்றார். பிரியா நித்திரவிளை பகுதியில் ஜெகன் என்பவருடன் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்த கள்ளக் காதல் மோகத்தால் அவர் குழந்தைகளை கவனிக்க நிறுத்தி விட்டார். மேலும், அவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி, படுக்கையில் தூங்கி கொண்டிருந்த தனது 14, 13, 10 வயதுடைய 3 மகன்களை காணவில்லை என நித்திரவிளை காவல் நிலையத்தில் அவரது தாய் பிரியா புகார் அளித்தார்.

காணாமல் போன 3 பேரும் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்ததை போலீஸார் அறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த அவர்கள் 3 பேரையும் மீட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தாயும், உடன் வசித்து வந்த ஜெகனும் தங்களை துன்புறுத்தியதாகவும், இதனால் தாங்கள் ஊரை விட்டு வெளியேறியதாகவும் குழந்தைகள் தெரிவித்தனர். நித்திரவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிரியா மற்றும் ஜெகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


இதையறிந்த 2 பேரும் தலைமறைவாகினர். நேற்று இரவு பிரியா தனது பெண் குழந்தையுடன் நெயூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அதே சமயம், ஜெகனை போலீசார் தேடி வருகின்றனர். குமரியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தைகளை கொடுமைப்படுத்திய தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.