கழிப்பறைக்கு செல்போனுடன் சென்ற இளைஞர்.. வழிந்தோடிய ரத்தம்; அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!

418

தாய்லாந்து…..

தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள Nonthaburi என்னும் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போனுடன் கழிவறைக்கு சென்றுள்ளார். இதன் பின், செல்போனை பயன்படுத்தி கொண்டவரே கழிவறைக்குள் அமர்ந்திருந்த அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது.

இதனால், கீழே குனிந்து என்ன நடக்கிறது என பார்த்த அந்த இளைஞருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், கழிவறைக்குள் இருந்த குட்டி மலைப் பாம்பு ஒன்று அந்த இளைஞரின் பிறப்பு உறுப்பின் நுனியில் கடித்து காயத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடனே, அவரது பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வழிந்து அவரது தொடை மற்றும் கால் பகுதியில் ரத்தம் வழிந்தோடி உள்ளது. இந்த நிலையில், அந்த இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


மேலும், அங்கு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் 3 தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞரின் தாய் கூறுகையில். மலைப்பாம்பு எப்படி எங்கள் வீட்டிற்குள் வந்தது என தெரியவில்லை எனவும் கழிவறையை ஒட்டியுள்ள கால்வாய் வழியாக ஒரு வேளை பாம்பு உள்ளே நுழைந்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இளைஞரை கடித்த அந்த பாம்பு அதிக விஷத்தன்மை கொண்டது இல்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் உயிர் தப்பியுள்ளார்.