அமெரிக்காவில் ஏழு குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்து உணவும், தண்ணீர் கொடுக்காததோடு அடித்து கொடுமைப்படுத்தி வந்த தம்பதியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nevadaவை சேர்ந்த தம்பதி Jonathan Rockwood (62) மற்றும் Marlaina Rockwood (48).
இவர்கள் ஏழு சிறார்களை தத்தெடுத்து வீட்டில் வளர்த்து வந்தனர். அதில் ஒரு சிறுமி சமீபத்தில் அங்கிருந்து தப்பி சென்று பொலிசாரை நாடியுள்ளார்.
பின்னர் பொலிசாரை வீட்டுக்கு அழைத்து வந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் Jonathan மற்றும் Marlaina ஆகிய இருவரும் ஏழு சிறார்களையும் எப்படி கொடுமைப்படுத்தி வந்தனர் என்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து ஒரு சிறுமி கூறுகையில், எங்கள் வளர்ப்பு தாய் எங்களை முகத்தில் குத்தி கொடுமைப்படுத்துவார். இதோடு குளர்சாதனப்பெட்டியில் கட்டிவைத்து இருவரும் சேர்ந்து அடித்து உதைப்பார்கள். நாங்கள் அடைத்து வைக்கப்பட்ட அறை வாசலில் நாய்களை பாதுகாப்புக்கு கட்டி வைத்திருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக உணவு மற்றும் தண்ணீரை கொடுக்காமல் எங்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.
என் சகோதரிகள் சிலர் கழிவறைக்கு சென்ற போது அங்குள்ள தண்ணீரை தாகம் காரணமாக குடித்ததை நான் பார்த்துள்ளேன் என அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து கொடூர மனம் கொண்ட Jonathan மற்றும் Marlaina-ஐ பொலிசார் கைது செய்தனர். இருவரும் எல்கோ கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஜாமீன் தொகை $100,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தம்பதியால் பாதிக்கப்பட்ட சிறார்கள் உடல் நல பாதிக்கப்படைந்த நிலையில் தற்போது அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.