காணாமல் போன நர்சிங் மாணவி சடலமாக மீட்பு.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

162

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சௌமியா எனும் நர்ஸிங் படித்து வந்த மாணவி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மூத்த மகள் சௌமியா (20) புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் இரத்தப்பரிசோதனை குறித்த டிப்ளமோ படிப்பு படித்து வந்துள்ளார்.

இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சௌமியாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

மாணவி சௌமியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணவியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி சௌமியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி

சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மாணவி சௌமியாவின் உடலை வாங்க மறுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் தற்போது மாணவி இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவிலேயே மாணவி உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மாணவி சௌமியாவின் உடலை பெறாமல் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுத்தவுடன் உடலை பெற்றுக்கொள்கிறோம் என்றும் உறவினர்கள் கூறிச் சென்றனர்.