காணாமல் போன வாலிபர்.. தோட்டத்தில் எலும்புக்கூடாக கண்டெடுப்பு!!

350

யோகராஜன்…

திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி விலக்கு பகுதியில் உள்ள பயன்பாடற்ற தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக ஆடு மேய்ப்பவர்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் யோகராஜன்(33) என்பது தெரியவந்தது. மேலும் பொன்மீனா என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகளும் 10 மாத பெண் குழந்தை உள்ளனர்.

யோகராஜன் எண்னெய் வியாபாரம் செய்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மேலும் காணாமல் போன ஒரு மாதத்திற்கு பின் கட்ராம்பட்டி பகுதியில் இவருடைய இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பயன்பாடற்ற தோட்டத்து பகுதியில் யோகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவர் காணாமல் போன அன்று கட்டம் போட்ட கைலியும் டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தார்.

மேலும் இவருடைய மனைவி நேரில் வந்து அடையாளம் காட்டிய பின்பு இறந்தது யோகராஜன் என்பது தெரியவந்தது.மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.