காதலர் தினத்தன்று நடந்த கொடூரம் : இளம்பெண் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலன்!!

172

ஆந்திராவில் வசிக்கும் கவுதமி என்ற 24 வயது பெண். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்த இளம் பெண் கணேஷ் என்ற 25 வயது இளைஞனை காதலித்து வந்தார்.

அவர்கள் காதலித்து வந்த நிலையில், கணேஷின் செயல்கள் பிடிக்காததால், கவுதமி காதலனை விட்டு பிரிந்தார். இதைத் தொடர்ந்து, கவுதமிக்கு வேறொரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன்படி, இருவரும் வரும் 29 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட கணேஷ், தனக்குக் கிடைக்காத பெண்ணை வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்தார்.

இதன் காரணமாக, அழகு நிலையத்திற்குச் சென்று கவுதமியைக் கத்தியால் குத்தினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவுதமியின் முகத்தில் வீசி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அந்த இளம் பெண் அருகில் இருந்தவர்களால் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் தப்பி ஓடிய இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், இன்று காதலர் தினத்தன்று, முன்னாள் காதலன் ஒரு இளம் பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.