காதலியின் தெருவில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த காதலன்.. நடந்தது என்ன?

166

தர்மபுரியில்..

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சுள்ளான்,(20) . இவர் அரூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஈட்டியம்பட்டி கூட்ரோடு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

அவரை பார்ப்பதற்கு இரவு நேரத்தில் சொந்த கிராமத்தில் இருந்து இளைஞர் சென்றதாகவும், அந்தப் பெண்ணின் சொந்த கிராமத்திற்கு முன்பாகவே உள்ள வேப்பம்பட்டி கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் இறந்து கிடந்துள்ளார்.


தகவலறிந்த உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பின்பு உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் சுள்ளான் இறப்பிற்கு நீதி வேண்டி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரவுண்டாணா சாலை சந்திப்பில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதில் சென்னை திருவண்ணாமலை சேலம் பெங்களூர் செல்லக்கூடிய பேருந்து பயணிகள் பாதிக்கப்பட்டனர்.