காதலியின் பேச்சை கேட்டு பொண்ணு கேட்க சென்ற காதலன் : பின் அரங்கேறிய சோகம்!!

381

அனந்தகுமார்…

பெண் பார்க்க வருமாறு அழைத்து காதலன் குடும்பத்தினரை அடித்து உதைத்த காதலியின் குடும்பத்தினர் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மண்டைக்காடு அருகே லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அதிஷ் (25). இவருக்கும் திருநயினார்குறிச்சி சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த விபரம் காதலியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிஷுடனான காதலை கைவிட கூறி உள்ளனர். ஆனால் அந்த பெண் காதலை நிராகரிக்க மறுத்துள்ளார்.


இந்த நிலையில், அதிஸின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவரது காதலியின் சகோதரி பேசுவதாகவும், உடனடியாக தங்களது பெற்றோருடன் பெண் பார்க்க வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

இதனை நம்பிய அதிஷ் அவரது தந்தை அனந்தகுமார் மற்றும் உறவினர்களுடன் காதலி வீட்டுக்கு சென்றார். அங்கு காதலியின் தந்தை விஜயகுமார் மற்றும் உறவினருடன் பேசினார். அப்போது, அவர்களிடையே மோதல் ஏற்பட்டது .

இதில் அனந்தகுமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கப்பட்டனர். படுகாயமடைந்த அனந்தகுமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அனந்தகுமார் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விஜயகுமார் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் விஜயகுமாரும் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். அதில் தன் மகளை கடத்த முயன்றதாக புகார் கூறியிருந்தார். அதன்பேரில் அனந்தகுமார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.