காதலியை கரம் பிடிக்கும் காமெடி நடிகர் அஸ்வின்! விரைவில் கெட்டி மேளம் ..!

456

கடந்த 2010-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்து வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் அஸ்வின். இந்த படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து கும்கி, எத்தன், வந்தான் வென்றான், முப்பொழுதும் உன் கற்பனைகள், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். கும்கி படத்தில் இவர் நடித்த பாத்திரம் அதிகம் பேசப்பட்டதால், இவரை கும்கி அஸ்வின் என செல்லமாக அழைத்தனர் ரசிகர்கள்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸின் பட அதிபர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் ஆவார். இவருக்கும், சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது. வித்யாஸ்ரீ, அமெரிக்காவில் படித்து, MS பட்டம் பெற்றவர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்ட, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் வருகிற 24-ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடக்கிறது.


லாக்டவுனில் நடைபெறவிருக்கும் இந்த திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இச்செய்தி அறிந்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.