காதலியை பழிவாங்கும் நோக்கில் தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

439

சென்னையில்..

புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கவிதா (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பெரம்பூர் பேரக்ஸ் சாலை குட்டி தெருவை சேர்ந்த லியோலின் ஜோஷ்வா தியோடர் (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். நாளவைடில், காதலன் நடவடிக்கை சரியில்லாததால் கவிதா, அவரை விட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார்.

ஆனால், லியோலின் ஜோஷ்வா தியோடர் பலமுறை கவிதாவை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரிலும் சென்றும் காதலிக்கும்படி மிரட்டி வந்துள்ளார். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த லியோலின் ஜோஷ்வா தியோடர், கவிதாவுடன் தனிமையில் இருந்த போது,அவருக்கு தெரியாமல் செல்போனில் எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கவிதா சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். உடனே சம்பவம் குறித்து கவிதாவின் தாய் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் லியோலின் ஜோஷ்வா தியோடரை பிடித்து விசாரணை நடத்திய போது, கவிதா என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார். இதனால் அவரை பழிவாங்கும் நோக்கில் நாங்கள் இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக ஒப்புக்கொண்டார்.


அதைதொடர்ந்து போலீசார் லியோலின் ஜோஷ்வா தியோடர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகன் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து அபாச வீடியோ வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த ஆபாச வீடியோவையும் அழித்தனர்.