காதலி படுகொலை : சடலத்துடன் ஒரு நாள் : கேரள இளைஞன் போட்ட திட்டம்!!

53

பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை உள்ளிட்ட காரணங்களுக்கு குடியேறி வருகின்றனா். அவ்வாறு வருபவர்களில் வடமாநிலங்களை சேர்ந்த பெண்கள் அதிகமானவா்கள் ஆவார்கள்.

அவர்கள் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி செய்வதற்கு வருகின்றனர். அப்படி வரும் பெண் பலர், காதலன் உள்ளிட்டோரால் கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது.

அதுபோன்ற சம்பவம் ஒன்று தற்போது பெங்களூரு இந்திரா நகா் பகுதியில் நடந்துள்ளது. பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மாயா கோகோய் என்ற இளம் பெண் வசித்து வந்தார்.

அவர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் ஆரவ் என்ற வாலிபருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் காதலித்து வந்துள்ளனா். கடந்த சில மாதங்களாக காதல் ஜோடி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதியும் அவர்கள் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் 2 பேரும் இந்திரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் ஒன்றாக தங்கி உள்ளனா்.


அங்கு வைத்து அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆரவ், தனது காதலி மாயா கோகோயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதில் அவரது காதலி மாயா கோகோய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஆரவ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.

இதற்கிடையே மாயா கோகோய் தங்கிய அறையில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இதுபற்றி இந்திரா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.

அந்த தகவலின்போில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனா். மேலும் அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனா்.

பின்னர் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினா். விசாரணையில் ஆரவ் காதலி மாயா கோகோயை கொலை செய்துவிட்டு தப்பியது தெரிந்தது.

மேலும் அவர் 2 நாட்கள் முன்பே காதலையை கொன்றதும், பின்னர் காதலியின் உடலை என்ன செய்வது என தெரியாமல் ஒரு நாள் முழுவதும் அந்த வீட்டில் தங்கி இருந்ததும் தெரிந்தது.

இதுமட்டுமின்றி பெண்ணின் உடலை கூறுப்போட்டுவிட்டு வீசுவதற்கு ஆரவ் முதலில் திட்டமிட்டுள்ளார்.

பின்னா் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு கேரளாவை சேர்ந்த ஆரவ் அங்கிருந்து வாடகை கார் ஒன்றை புக் செய்து தப்பி உள்ளார். தற்போது இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைரலாக பரவி வருகிறது.