காதலைச் சொல்ல வீடு முழுவதும் மெழுகுவர்த்திகளை ஏற்றிய பிரித்தானியர்: காதலியை வீட்டுக்கு அழைத்துவந்தபோது கண்ட காட்சி!!

444

பிரித்தானியர் ஒருவர் தன் காதலியிடம் தன் காதலை வித்தியாசமாக சொல்வதற்காக, வீடு முழுவதும் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளை ஏற்றியுள்ளார்.

பிரித்தானியாவின் Sheffieldஇல் வாழும் அந்த நபர், வீடு முழுவதும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துவிட்டு,

வீட்டை பலூன்களால் அழகுபடுத்திவிட்டு, காதலியுடன் கொண்டாடுவதற்காக ஒயின் போத்தல் ஒன்றையும் வாங்கி வைத்துவிட்டு,

வேலைக்கு சென்ற காதலியை அழைத்துவரச் சென்றுள்ளார்.


காதலியை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினால், தெருவெல்லாம் ஒரே கூட்டம். தீயணைப்பு வீரர்கள் நின்று வீடு ஒன்றில் பற்றி எரியும் தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்புறம் கவனமாக பார்த்தால், பற்றியெரிவது அவருடைய வீடு… அவரது பெயரை வெளியிடப்போவதில்லை என்று கூறிய தீயணைப்பு வீரர் ஒருவர்,

வீடு முழுவதும் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகள், பலூன்கள், இது போதாதென்று ஒரு போத்தல் ஒயின், ஆக, எல்லாம் சேர்ந்து தீப்பிடித்து எரிந்துவிட்டன.

கடைசியில், அவருக்கு ஒரே ஒரு சந்தோஷமான செய்தி, அவரது காதலி அவரது காதலை ஏற்றுக்கொண்டுவிட்டார், என்கிறார் அந்த தீயணைப்பு வீரர்.

காதல் எல்லாம் ஓகேதான், தயவு செய்து இப்படி வீடு முழுவதும் எல்லாம் மெழுகுவர்த்திகளைக் கொளுத்தி வைக்காதீர்கள் என்கிறார்கள் தீயணைப்பு வீர்ரகள்.