கார் மோதி பெண் எஸ்.ஐ. மரணம் : பணி நிமித்தமாக புல்லட்டில் செல்லவில்லை என தகவல்!!

208

நேற்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புல்லட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு பெண் காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரும் வழக்கு நிமித்தமாக சென்றதாக கூறப்பட்டது. மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் பகுதியில் இன்று காலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் வாகனத்தின் மீது,

பின்னால் வந்த கார் மோதியதில் சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையை, அடுத்த மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயஸ்ரீ (38) மற்றும் காவலராக பணிபுரிந்து வந்தவர் நித்யா (33).

மேற்கண்ட இருவரும், வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் நபரை பிடிப்பதற்காக நேற்று காலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்பட்டது.

அப்போது, மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் மகளிர் போலீஸார் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, பின்னால் வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பயங்கர வேகத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில். பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார்.


தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேல்மருவத்தூர் போலீசார், காயமடைந்த காவலர் நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், உயிரிழந்த எஸ்ஜ., ஜெயஸ்ரீயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் நித்யாவும் சிகிச்கை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அவர்கள் இருவரும் பணி நிமித்தமாக செல்லவில்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இருவரும் புல்லட்டில் இந்தியா முழுக்க சாதனைப் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.