கால் வலியால் தவித்த கர்ப்பிணி மனைவி… கணவர் செய்த தரமான சம்பவம்! அனைவரையும் நெகிழ வைக்கும் வீடியோ..!

1005

சீனாவில் நடந்த ஒரு சம்பவம் ஒரே நேரத்தில் மனிதர்கள் எந்த அளவுக்கு நல்லமனம் படைத்தவர்களாக இருப்பதில்லை எனவும், அதேநேரத்தில் ஒரு கணவன்_மனைவியின் உறவுநிலையின் ஆழம் என்ன என்பதையும் போதிக்கிறது.

சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு தன் கணவரோடு, மாதாந்திர சிகிட்சைக்காக போனார் கர்ப்பிணி பெண்.

அங்கே போடப்பட்டு இருந்த இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டது. அதேநேரம் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒருவரும் எழுந்து இடம் கொடுக்கவும் இல்லை. அவர் நீண்ட நேரம் நின்றதில் கால் வலி வந்து விட்டது.


மனைவியின் கால்வலியையும், அங்கே இருந்த ஒருவரும் இடம் தராததையும் பார்த்த அவரது கணவர் மருத்துவமனை வளாகத்திலேயே உட்கார்ந்தார். தொடர்ந்து அவரது முதுகிலேயே மனைவியையும் அமரச்செய்தார்.

இந்த செயல் அங்கு இருந்த மனிதாபிமானமற்றவர்களுக்கு சூடேற்றும் வகையிலும், அதேநேரம் கணவன், மனைவி உறவு நிலை எப்படி இருக்க வேண்டும் என்றும் உணர்த்தியது. இந்த காட்சியை இணையத்தில் பல லட்சம் மக்கள் பார்த்துள்ளனர்.

Click Here to watch this video