கீழே கிடந்த ஒரு டாலர் நோட்டை எடுத்த பெண்: பின்னர் நடந்த பயங்கர நிகழ்வுகள்!!

432

அமெரிக்கா..

கென்டக்கியைச் சேர்ந்த Renee Parsons என்ற பெண் தன் குடும்பத்துடன் டெக்சாசை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்போது, உணவருந்துவதற்காக வழியில் டென்னஸ்ஸியிலுள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் வண்டியை நிறுத்தியிருக்கிறார்.

உணவகத்தினுள் தரையில் ஒரு டொலர் நோட்டு ஒன்று கிடப்பதைக் கவனித்த Renee, குனிந்து அதை எடுத்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் நிலைகுலைந்து தரையில் விழுந்த Renee சுயநினைவிழந்திருக்கிறார்.

உடல் எரிவது போல் தோன்றி பிறகு உடல் முழுவதும் மரத்துப்போனதாக பின்னர் தெரிவித்துள்ளார் அவர். கீழே விழும்போது, தன் கணவரான Justinஉடைய கையைப் பிடித்திருக்கிறார் அவர்.


உடனே, Justinஉடைய கையில் சிவப்புப்புள்ளிகள் தோன்றியதுடன், அவரது உதடுகள் மரத்துப்போயிருக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியிருக்கிறார்கள் தம்பதியர்.

அந்த ஒரு டொலர் நோட்டில் பயங்கரமான போதைப்பொருள் ஒன்று தடவப்பட்டிருந்திருக்கலாம் என தம்பதியர் கருதுகிறார்கள். இனி, ஒரு டொலர் இல்லை, 100 டொலர் நோட்டு கீழே கிடந்தால் கூட தொடமாட்டேன், நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும் என்கிறார் Renee.