குடிபோதையில் கத்தியால் குத்த வந்த கணவர்… உடனே மனைவி செய்த செயல்.. அதிர்ச்சி பின்னணி!!

295

திண்டுக்கல்லில் குடிபோதையில் தகராறில் கணவனை மனைவி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் முருகபவனம் அருகே உள்ள இந்திரா நகரில் வசித்து வந்தவர் கண்ணன் (45). இவரது மனைவி மோகனாதேவி (40). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கண்ணன், திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள லாரி பாடி கட்டும் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை கண்ணன் பணி முடிந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மோகனாதேவியை குத்த முயன்றார்.

அப்போது மோகனாதேவி கத்தியை பிடுங்கி கணவரை சரமாரியாக குத்தினார். இதில், பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனாதேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.