குடிபோதையில் கார் ஓட்டிய மருத்துவர்… உயிரிழந்த இளம்பெண்: மருத்துவர் கூறிய கமெண்ட்!!

388

குடிபோதையில் கார் ஓட்டிய மருத்துவர் ஒருவர் ஏற்படுத்திய விபத்தில், அவருடன் பயணித்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

அமெரிக்காவில், நரம்பியல் சிகிச்சை நிபுணரான Dr Jonathan Nakhla (36), குடித்துவிட்டு குடிபோதையில் மணிக்கு 138 மைல் வேகத்தில் கார் ஓட்டியபோது, அவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்தில், அவருடன் பயணித்த மருத்துவக்கல்லூரி மாணவியான Samantha Thomas (24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். Samanthaவின் மரணம் கொலையாக கருதப்பட்டு விசாரணைக்காக Jonathan நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

அப்போது விசாரணை அதிகாரிகள், விபத்தில் Samantha உயிரிழந்த நிலையிலும், அவரைக் குறித்துக் கவலைப்படாமல், தனது விலையுயர்ந்த கைக்கடிகாரம் சேதமடைந்தது குறித்து Jonathan கவலை தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.


அத்துடன், யாருக்கோ போன் செய்த Jonathan, ஆம் கண்ணே, உனக்கு அந்த கார் மிகவும் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும் என்று கூறியதையும் கேட்டதாக கூறப்படுகிறது.

தனது தவறால் ஒரு இளம்பெண்ணின் உயிர் போன நிலையிலும், அதைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் தனது கைக்கடிகாரம் மற்றும் கார் குறித்து கவலை தெரிவித்த Jonathanஇன் செயல் அதிர்ச்சியடையைச் செய்துள்ளது.

இதற்கிடையில், Jonathanஆல் ஒரு உயிர் போனதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில், தன் மகள் உயிரிழப்பதற்கு காரணமே Jonathanதான் என Samanthaவின் தந்தை கூடுதலாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.