மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருமலைசெல்வன் – சுகன்யா தம்பதியினர்.
இவர்களுக்கு 7 வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். திருமலைசெல்வன் – சுகன்யா ஆகியோரிடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் ஒரு மாதத்துக்கு முன்பு ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஆண்டிகாட்டில் உள்ள தன் தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சுகன்யா சென்றுள்ளார். மேலும் இவர் அதே பகுதியில் ஒரு சாய பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த 8ம் தேதி திருமலைசெல்வன் ஈரோட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துள்ளார்.
அப்போது தம்பதியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திருமலைசெல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் இரு குழந்தைகளின் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த 4 வயது சிறுவன் நிகில் 70% தீ காயத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து கடந்த 9ம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் கடந்த சில திணைகளாக தீவிர சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் நிகில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கனவே தீ வைத்து கொளுத்தியது தொடர்பாக சுகன்யா, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டு திருமலைசெல்வன் கைது செய்யப்பட்ட நிலையில்,
சிறுவன் நிகில் உயிரிழந்ததையடுத்து அதனை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.