அமெரிக்கா…
அமெரிக்காவின் Utahவில் தன் கணவர் Anthony Passalaequa (35) மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் Keira Henricksen (18), இரவில் பிள்ளைகளின் அறையிலிருந்து ஏதோ சத்தம் வந்ததால் அங்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கே பொம்மைகள் போட்டு வைத்திருந்த கனமான பெட்டி ஒன்று கீழே விழுந்துகிடப்பதைக் கண்டு பிள்ளைகளை சத்தமிட்டுள்ளார் Keira.ஆனால், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என பிள்ளைகள் கூறியுள்ளார்கள்.
ஆகவே, பிள்ளைகளைக் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவான காட்சிகளை சோதித்துள்ளார் Keira.அப்போதுதான், பிள்ளைகள் சொன்னதுபோல, அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதும் அந்த பெட்டி தானாகவே கிழே விழுவதையும் அவர் கவனித்துள்ளார்
ஏற்கனவே, தான் உடை மாற்றும்போது யாரோ பின்னால் நிற்பது போலவும், யாரோ பேசுவதுபோலவும் பலமுறை உணர்ந்துள்ளதாக தெரிவிக்கும் Keira, அங்கு ஏதோ ஆவி இருப்பதை புரிந்துகொண்டார்.
Anthonyக்கு ஆவிகளிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால், இந்த வீடியோவைப் பார்த்தபிறகுதான் இதுவரை Keira சொன்னதெல்லாம் உண்மைதான் என்பதை புரிந்துகொண்டுள்ளார் அவர்.