கெட்ட வார்த்தை சொல்லி திட்டுனாங்க!.. பிணமாக மிதந்த 3 குழந்தைகளின் தாய்!!

1030

தமிழகத்தில் கணவன் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஆவடியை அடுத்த திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் தம்பதியினர் பாலாஜி- புவனேஸ்வரி, டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் பாலாஜிக்கு மூன்றுமே பெண் குழந்தைகள்.

புவனேஸ்வரி அங்குள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார், இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கெட்ட வார்த்தை சொல்லி பாலாஜி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து போன புவனேஸ்வரி கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலைக்கு முயன்றார், அதன்பின்னர் சமாதானம் ஆகி கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினார்.


இந்நிலையில் மீண்டும் கடந்த 23ம் திகதி கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய 8மாத குழந்தையுடன் புவனேஸ்வரி மாயமானார். இதுபற்றி பாலாஜி ஆவடி பொலிசில் புகாரளிக்க, வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் புவனேஸ்வரியையும், 8 மாத குழந்தையையும் தேடி வந்தனர்.

இதற்கிடையே கோவிந்தன் தாங்கல் ஏரியில் நேற்று காலை மாயமான புவனேஸ்வரி பிணமாக மிதந்தார்.

தகவல் கிடைத்ததும் ஆவடி பொலிசார் மற்றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று புவனேஸ்வரி உடலை மீட்டனர்.

உடனடியாக பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாயமான 8 மாத குழந்தையை தேடி வருகின்றனர். அந்த குழந்தையை அவர் வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு தான் மட்டும் ஏரியில் குதித்து தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.