இத்தாலியில்..
இத்தாலியில் கேபிள் கார் விபத்தில் சிக்கி 14 பேர் பலியான நிலையில், ஒரே ஒரு ஐந்து வயது சிறுவன் மட்டும் அதிசயமாக உயிர் தப்பினான்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த Eitan Biran என்னும் அந்த சிறுவனின் தாய் Tal (26), தந்தை Amit (30), தம்பி Tom (2), தாத்தா Yitzhak Cohen (81) மற்றும் பாட்டி Barbara Koninsky (71) ஆகிய அனைவருமே அந்த விபத்தில் உயிரிழக்க,
உயிர் தப்பிய Eitan மட்டும் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இந்நிலையில், கோமாவிலிருந்து கண் விழித்த Eitan, தன் அத்தையான Aya (41)இடம், அம்மாவும் அப்பாவும் எங்கே என்று கேட்டுள்ளான்.
கோமாவிலிருந்து கண் விழித்துவிட்டாலும் அவனால் சரியாக பேச முடியவில்லை. ஆகவே, எனக்கு தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று கூறினானாம் Eitan.
நான் எங்கே இருக்கிறேன், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று அத்தையிடம் கேட்ட Eitan, என் அம்மாவும் அப்பாவும் எங்கே என்று கேட்டிருக்கிறான்.
ஆனால், அவனிடம் அவனது பெற்றோர், தம்பி, தாத்தா பாட்டி ஆகியோர் இறந்துபோனார்கள் என்பது குறித்த விவரம் சொல்லப்பட்டதா என்பது தெரியவில்லை.
இந்நிலையில், விபத்துக்குள்ளான கேபிள் கார் நிறுவனத்தின் தலைவரான Luigi Nerini (56) என்பவரும், அவரது சக ஊழியர்களான Gabriele Tadini, Enrico Perocchio என்னும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Luigi மீது 14 கொ.லை கு.ற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.