கொடிய புற்றுநோயுடன் தைரியமாகப் போராடும் இலங்கைத் தமிழரான பிபிஸி செய்தி வாசிப்பாளர்..!!

1143

புற்றுநோயுடன் போராடியபடியே வாழ்ந்துவருபவரான இலங்கையில் பிறந்த பிரபல செய்தி வாசிப்பவர் ஒருவர், தான் எப்போது தன் இறுதிக் கடமைகளை ஒழுங்கு செய்யவேண்டும் என மருத்துவரிடம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் BBC தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் ஜார்ஜ் அழகையா (64). லண்டனில் தனது மனைவி Francesஉடன் வாழ்ந்துவருகிறார் அழகையா.

புற்றுநோயுடன் போராடியபடியே வாழ்ந்துவரும் அழகையா, தனது புற்றுநோய் தனது நுரையீரல் வரை பாதித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.தனது மருத்துவர்களிடம், தான் எப்போது தன் இறுதி கடமைகளை ஒழுங்கு செய்யவேண்டும் என கேட்டதாக தெரிவிக்கிறார் அவர்.

ஆனால், மருத்துவர்கள் தனக்கு பதிலேதும் சொல்லமாட்டேன்கிறார்கள் என்று கூறும் அழகையா, புற்று மூன்றாவது உறுப்பு வரை வந்துவிட்டது, அதாவது நுரையீரல் வரை வந்துவிட்டது என்று மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள் என்கிறார்.மார்ச் மாதத்தில் அழகையாவுக்கு கொரோனாவும் தொற்றியது. ஆனால், அதை தனது எடிட்டரைத் தவிர யாருக்கும் சொல்லவில்லை அவர்.நுரையீரல் வரை புற்று வந்துவிட்டதால், அவரது கீமோதெரபி சிகிச்சையின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.


புற்றுநோய் தினமும் எனது வாசல் கதவை தட்டுகிறது, எனக்கு இப்படி ஒரு பிரச்சினை வந்துள்ளதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று கூறும் அழகையா, ஆனால் அது என்னை விழுங்கிவிட அனுமதிக்கமாட்டேன் என்கிறார்.