கொரோனாவுக்கு மருந்தாக 15 கோடிக்கு மூலிகை லாலிபாப் மிட்டாய்: பதவியை பறிகொடுத்த அமைச்சர்!!

1214

கொரோனா வைரஸ்கு தடுப்பு மருந்தாக மூலிகை கலந்த லாலிபாப் முட்டாயை பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்ட மடகாஸ்கர் கல்வி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

மூலிகை மருந்தை குடிக்கும் போது கசப்பு தெரியாமல் இருக்க 15 கோடிக்கு லாலிபாப் மிட்டாய் வாங்கி அதில் மூலிகை மருந்தை கலந்து மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்ட மடகாஸ்கரை சேர்ந்த கல்வி அமைச்சர் தற்போது தனது பதவியை இழந்து பரிதாபமாக முழிக்கிறார். இந்த சம்பவம் தற்போது உலக நாடுகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியப்பெருங்கடல் தீவு நாடு, மடகாஸ்கர். இந்த நாட்டிற்கு ரிஜாசோவா ஆண்ட்ரியமனா என்பவர் கல்வி மந்திரி. இவர் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து அவர்களுக்கு வருமுன் காப்பதற்கான கசப்பான மூலிகை மருந்து கொடுக்கும் போது மாணவர்கள் கசப்பு தன்மையால் அந்த மருந்தை வெளியேற்றி விடக்கூடாது என்பதற்காக 15 கோடிக்கு லாலிபாப் மிட்டாய் வாங்க திட்டமிட்டிருக்கிறார்.

இதற்காக அவர் 15 கோடி நிதி ஒதுக்கியிருப்பது வித்தியாசமாக இருந்தாலும் இந்த திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சர்ச்சைகள் கிளம்பியதால் அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் சர்சையில் சிக்கிய கல்வி மந்திரி ரிஜாசோவாவை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.


அந்த நாட்டில் கொரோனா வைரஸ்க்கு “கோவிட் ஆர்கானிக்ஸ்” என்ற மூலிகை டானிக் பரிந்துரை செய்யப்படுகிறது. பல ஆப்பரிரிக்க நாடுகள் இந்த டானிக்கை இறக்குமதி செய்கின்றன. இது கொரோனாவை எதிர்த்து போராட உதவும் என்று நம்பப்படுகிறது.

அந்நாட்டு மக்களால் மூலிகை டானிக் மீது எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா மூலிகை
டானிக்குக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்.