கொரோனா ஒழிய வேண்டி குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு செய்த யாத்ரீகர்கள்!

308

யாத்ரீகர்கள்……….

கொரோனா ஒழிய வேண்டி ஜப்பான் தலைநர் டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் யாத்ரீகர்கள் குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு நடத்தினர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கை முறை மட்டுமல்லாமல், பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இருப்பினும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஒழிய வேண்டி டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் யாத்ரீகர்கள் குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு நடத்தினர்.


ஆண்டுதோறும் 2வது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் இந்த விநோத சடங்கு, 66வது ஆண்டாக நடந்தது. சிறிய வெள்ளைத் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு. ஐஸ்கட்டிகள் போடப்பட்ட குளத்தின் குளிர்ந்த நீரில் இறங்கி, யாத்ரீகர்கள் வழிபாடு நடத்தினர். உலக மக்களின் ஆன்மா தூய்மையடைய வேண்டி நடத்தப்படும் இந்த சடங்கு முறை இந்த ஆண்டு, கொரோனா தொற்று ஒழிய வேண்டும் என்ற கருத்தில் நடந்ததாக சடங்கில் கலந்து கொண்ட யாத்ரீகர்கள் தெரிவித்துள்ளனர்.