கொரோனா நிதி உதவியை வைத்து ரூ.2 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் வாங்கிய நபர்!

374

கொரோனா நிதி உதவியை வைத்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை ஃப்ளோரிடாவை சேர்ந்த நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன.

அவற்றின் இழப்பை ஈடு செய்வதற்காக வங்கிகளில் இருந்து கொரோனா நிவாரணக் கடன் தொகைகளை பெற்றுக்கொள்ளலாம் என ஒரு சில நாட்டு அரசுகள் அறிவித்தன.

அதனால், வங்கிகளில் கடன் பெற்று தங்களது தொழில்களை புதுப்பிக்க பல நிறுவனங்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அதையே சிலர் தங்கள் சொந்த செலவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த டேவிட் ஹைன்ஸ் என்பவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் தனது நிறுவனத்தை புதுப்பிக்கவேண்டும் என்று கூறி கடன் தொகை பெற்றுள்ளார்.

நான்கு நிறுவனங்கள் சார்பாக கடன் தொகைக்கு விண்ணப்பித்திருந்த அவர், 13.5 மில்லியன் டாலர் கடன் தொகை வெண்டுமெனக் கோரி இருந்தார். ஆனால், அவருக்கு 3.9 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 2.4 கோடி) மட்டுமே கிடைத்துள்ளது.

ஆனால், அந்த பணத்தை வைத்து தன் நிறுவனத்தை புதுப்பிப்பதற்கு பதிலாக தன் சொந்த பயன்பாட்டிற்காக விலை உயர்ந்த லம்போகினி காரை வாங்கியுள்ளார் டேவிட். இந்த சம்பவம் குறித்து அறிந்த வங்கி ஊழியர்கள் இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, டேவிட் மீது அப்பகுதி பொலிஸார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.