கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மாதிரி எடுத்த லேப் டெக்னீசியன்! அதிர்ச்சி சம்பவத்தின் முழு தகவல்!!

1177

இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற 24 வயது இளம் பெண்ணிடம், மூக்கில் பரிசோதனைக்காக மாதிரி எடுப்பது போல், அவரின் பிறப்புறுப்பில் மாதிரி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி விடுவதால், இந்த நோய் குறித்து சிறிய அறிகுறி இருந்தால் கூட பரிசோதனை அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னுடன் பணி புரிந்த மற்றொரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தனக்கும் எங்கு கொரோனா பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி பரிசோதனைக்கு சென்ற போது, பொதுவாக கொரோனா பரிசோதனைக்காக மூக்கு அல்லது வாயில் இருக்கும் சளிகளை எடுத்து, கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்.


ஆனால், அந்த பெண்ணை பரிசோதனை செய்த பரிசோதனை செய்யும் நபர், உங்களின் பிறப்புறுப்பில் இருந்து மாதிரிகளை எடுக்க வேண்டும். அது மிக முக்கியமானது என்று கூறி, அந்த பெண்ணை நம்ப வைத்துள்ளார்.

இதையடுத்து பரிசோதனை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அப்பெண், தனக்கு நடந்த பரிசோதனை குறித்து சகோதரரிடம் கூறியுள்ளார்.

இதனால், அந்த சகோதரர் உடனடியாக தனக்கு தெரிந்த சில மருத்துவர்களிடம் இது குறித்து விசாரித்த போது,

அப்படி ஒரு சோதனையே கிடையாது என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு, அந்த பெண்ணும், சகோதரரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் இது குறித்து காவல்நிலையத்தில் அந்த நபர் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.