கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய இளைஞன்.. இறுதியில் நடந்த சோகம்!!

135

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ‘கிரீன் ட்ரெண்ட்ஸ்’ என்ற பிரபல தனியார் அழகு நிலையம் இயங்கி வருகிறது.  நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர். இதையடுத்து நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்தனர்.

அப்போது கடையில் இருந்த பொருட்கள் மற்றும் லேப்டாப் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அழகு நிலைய மேலாளர் ஜெயகுரு, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ​​மாடியில் ‘குறட்டை’ சத்தம் கேட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் மாடிக்கு சென்று பார்த்தபோது குடிபோதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவரை கண்டனர். இதையடுத்து போலீசார் அவரை எழுப்பி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் ஆந்திராவை சேர்ந்த கிஷோர் (24) என்பது தெரியவந்தது. நள்ளிரவில் பியூட்டி பார்லரின் பூட்டை உடைக்க முயன்றதும், எதுவும் கிடைக்காததால் குடிபோதையில் மாடியில் தூங்கியதும் தெரியவந்தது.


இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வேறு ஏதேனும் கடைகளில் திருடிச் சென்றாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.