கொழும்பில் நடு வீதியில் வைத்து சரமாரியாக வெட்டப்பட்ட நபர்!!

1023

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஞ்சிபானி இம்ரானின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நஜித் நேற்று மாலை 6.39 மணி அளவில் மாளிகாவத்தை சத்தர்ம விஹாரைக்கு முன்னாள் தாக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த தாக்குதலை இந்தியாவில் மறைந்து வாழும் போதை பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றசெயல்களை புரிபவருமான புகுடு கண்ணா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட் விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன், முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே தாக்குதலின் பின்னணியில் புகுடு கண்ணாவின் திட்டம் உள்ளமை தெரியவந்துள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தாக்குதலை மேற்கொண்டு தப்பியவர்களில் ஒருவர் சுவாமிநாதன் எனப்படும் புதா என தெரியவந்துள்ளது.