கோடிகளில் எகிறிய சொத்துமதிப்பு… குடும்பத்தோடு சிக்கிய திமுக பெண் கவுன்சிலர்!!

67

சாதாரண கவுன்சிலர் தானே? என்று யாரும் கேட்டு விட முடியாது. இந்த அஞ்சு வருஷத்துக்குள்ள கிடுகிடுவென கோடிகளில் எகிறியது சொத்து மதிப்பு.

இத்தனைக்கும் பெரிய நகரப் பகுதிகளில் எல்லாம் கவுன்சிலர் கிடையாது. ஆனா ஆளுங்கட்சி கவுன்சிலர் என்கிற கெத்து போதும் என்று சொத்துக்களைக் குவிப்பதில் கோதாவில் இறங்கியிருக்கிறார் திமுக கவுன்சிலர் ராஜலட்சுமி.

காஞ்சிபுரம் மாவட்டம், 2வது வார்டு திமுக கவுன்சிலரான ராஜலட்சுமி மீதும், அவரது குடும்பத்தினரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில், வருமானத்திற்கு மேலாக சொத்துகளை சேர்த்ததாக திமுக கவுன்சிலர் ராஜ லட்சுமி, அவரது கணவர், தாய், அக்கா ஆகியோரின் சொத்துகளின் மீதான விலை ஆராய்ச்சிக்கு உட்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் விசாரித்து வந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார், ராஜலட்சுமி மீதும், அவரது குடும்பத்தார் மீதும் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


திமுக கவுன்சிலர் ராஜ லட்சுமியின் கணவர் செங்கல்பட்டு மாவட்ட பொதுப்பணி நீர்வளத் துறையின் அலுவலக துணை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

ராஜ லட்சுமி, அவரது கணவர், தாய், அக்கா ஆகியோர் 2009ம் ஆண்டு ஒரு கட்டுமான நிறுவனம் தொடங்கியுள்ளனர்.

இந்த நிறுவனம், பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2016ல் இருந்து, இவர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதால் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.