இந்தோனேசியாவில்..
இந்தோனேசியாவில் 65 வயதான கோடீஸ்வரருக்கும், 19 வயது இளம்பெண்ணிற்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் விவாகரத்து செய்துள்ளனர்.
ஹஜி சொண்டனி (65) என்பவருக்கும், பியா பர்லண்டி (19) என்ற பெண்ணிற்கும் கடந்த மே மாதம் 18ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அநாட்டு வழக்கப்படி மணப்பெண் பியாவுக்கு, மணமகன் ஹஜி ரூ. 1,22,74,671.72 வரை வரதட்சணை கொடுத்ததோடு, புதிய வீடு மற்றும் கார் வாங்கி கொடுத்தார்.
இதோடு திருமண செலவுகளையும் ஹஜி முழுமையாக ஏற்று கொண்டார். இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதத்தில் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 3ஆம் திகதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
விவாகரத்துக்கான சரியான காரணம் வெளியிடப்படவில்லை, ஆனால் திருமணமான இரண்டு வாரங்களிலேயே புதுப்பெண் பியாவுக்கு தனது கணவர் மீது விருப்பமில்லை என்று ஊகங்கள் பரவின.
பொதுவெளியிலும் இது தெரிய ஆரம்பித்தது. ஏனெனில் ஹாஜியும் பியாவும் அவர்களது வீட்டின் முன் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியானது. அதில் அவர்கள் தள்ளி தள்ளியே உட்கார்ந்திருந்தனர், இருவர் முகத்திலும் ஒரு இறுக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.