பிரித்தானியாவில்…
பிரித்தானியாவில் லொட்டரியில் விழுந்த பெரிய பரிசின் மூலம் கோடீஸ்வரரான இளைஞன் அதே நாளில் தனது மனதுக்கு நெருக்கமான பெண்ணுடன் முதல் முறையாக டேட்டிங் சென்றிருக்கிறார்.
டுட்லீ நகரை சேர்ந்தவர் லூக் அஷ்மன் (22) செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்தார். இவருக்கு சமீபத்தில் லொட்டரியில் £250,000 என்ற பிரம்மாண்ட பரிசு விழுந்துள்ளது.
அதே நாளில் தனது மனதுக்கு நெருக்கமான காதலியுடன் முதல் முறையாக டேட்டிங்கும் அஷ்மன் சென்றுள்ளார்.
அஷ்மனும் அழகிய இளம்பெண்ணும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் கடந்த டிசம்பரில் இருந்து பார்த்து கொண்டும் ஓரிரு வார்த்தைகளை பேசி கொண்டார்களே தவிர வெளியில் எங்கும் செல்லவில்லை.
இந்த நிலையில் லொட்டரியில் பரிசு விழுந்த அதே நாளில் காதலியுடன் அஷ்மன் டேட்டிங் சென்றிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரே நாளில் இரண்டு முறை பரிசுகளை வென்றேன் என இதை கூறுவேன்.
ஆம்! லொட்டரியில் விழுந்த பரிசு மற்றும் காதலியுடன் டேட்டிங் சென்றதை தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன். அந்த இரவு நாங்கள் சாப்பாட்டுக்கு வெளியே சென்றோம்.
லொட்டரி வெற்றி மற்றும் முதல் டேட்டிங் என இரண்டு அற்புதமான நிகழ்வை கொண்டாடினோம்.பரிசு பணத்தில் முதலில் கார் வாங்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.