கோமாவில்…
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண் ஒருவர், நினைவுக்கு திரும்பியதும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைவரையும் மிரள வைத்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாண்டா என்ற 55 வயது பெண்மணி தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாண்டாவை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.
அப்போது வாண்டா பால்மர் கோமாவுக்கு தள்ளப்பட்டுள்ளதால், அவரிடம் இருந்து எந்த விவரங்களும் சேகரிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
விசாரணை மேற்கொண்டு வந்த போலீசாருக்கும், ஆதாரங்கள் குறைவாக இருந்ததால், வாண்டாவின் நிலைக்கு காரணம் யார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், சுமார் இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த வாண்டா சமீபத்தில் சுயநினைவுக்கு திரும்பிய நிலையில் தன்னை கொலை செய்ய முயன்ற நபர் யார் என்பது பற்றி போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.
தனது உடன் பிறந்த சகோதரனா டேவிட் பால்மர் பெயரை சொல்லி, தன்னை கொலை செய்ய முயன்று, இந்த நிலைக்கு ஆளாக்கியதாக வாண்டா பால்மர் தெரிவித்துள்ளார். வாண்டாவின் சகோதரரான டேவிட் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண் ஒருவர், சுயநினைவுக்கு திரும்பிய பிறகு, தனது சகோதரர் தான் இதற்கெல்லாம் காரணம் எனக் கூறிய நிலையில், அவர் கைது செய்யப்பட்ட சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான செய்தி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.