பிலிப்பைன்ஸ் நாட்டில் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளும் வகையில் உலகின் மிகப்பெரிய கோழி வடிவ ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
தனித்துவமான கட்டிடக்கலை எப்போதும் உலகை ஆச்சரியப்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது, அந்த வகையில் பிலிப்பைன்ஸில் உலகின் மிகப்பெரிய கோழி வடிவ கட்டிடம் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காம்புஸ்டோஹான் என்ற நகரத்தில் அமைந்துள்ள இந்த கோழி வடிவ கட்டிடம் சுமார் 34.931 மீட்டர் (114 அடி 7 அங்குலம்) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட கோழி வடிவ கட்டிடம் காம்புஸ்டோஹான் ஹைலேண்ட் ரிசார்ட்டின்(Campuestohan Highland Resort) ஒருப் பகுதியாக கட்டப்பட்டுள்ளது.
ஹைலேண்ட் ரிசார்ட்டில் குளிரூட்டப்பட்ட அறைகள், பெரிய படுக்கைகள் கொண்ட அறைகள், டிவி மற்றும் ஷவர்களுடன் கூடிய பல அறைகள் இருப்பதோடு, உங்களுக்கு மறக்க முடியாத தங்குதல் அனுபவத்தை வழங்குகிறது.
கோழி வடிவிலான கட்டிடத்திற்கான கருத்துருவாக்கம் மற்றும் திட்டமிடலுக்கு சுமார் 6 மாதங்கள் ஆனதாக Ricardo Cano Gwapo தெரிவித்துள்ளார்.
இதன் கட்டுமானம் 2023 ஜூன் 10 அன்று தொடங்கி 2024 செப்டம்பர் 8 ஆம் திகதி கட்டி முடிக்கப்பட்டதோடு உலக கின்னஸ் சாதனையிலும் இடம் பிடித்துள்ளது.
இந்த கோழி வடிவமைப்பானது, பிராந்தியத்தின் புயல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு கட்டப்பட்டு இருப்பதாகவும், கடுமையான வானிலை நிலைமைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்றும் Cano Gwapo தெரிவித்துள்ளார்.