கோவிலின் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம்! வழக்கில் அதிரடி தீர்ப்பு!!

1006

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கருதப்படுகிறது.

இங்கு இருக்கும் பெருமாள், பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். திருவாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தண்ட வர்மா மகாராஜாவால் 260 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டது. அவர் மேற்பார்வையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்தக் கோயிலை திருவாங்கூர் சமஸ்தான குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வந்தனர்.

பத்மநாபசுவாமி கோவில் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்டு அகம விதிமுறைகளின் இந்தக் கோவிலின் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி சிறிய, பெரியதுமாக 9 கோட்டைகள் உள்ளன.


இந்த நிலையில், பத்மநாபசுவாமி கோவிலுக்குள் இருக்கும் ரகசிய சுரங்க அறைகளில் ஏராளமான தங்க, வைர நகைகள் இருப்பதாகவும், அவற்றை கண்டறிய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டி.பி.சுந்தரராஜன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, பாதாள அறைகளை திறந்து சோதனை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்தப் பணிக்காக 7 பேர் குழுவையும் அமைத்தது. நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன் உள்ளிட்ட 2 பேரை பார்வையாளர்களாக நியமித்தது.

கோயிலின் ரகசிய அறைகள் ஏ முதல் எப் வரை பிரிக்கப்பட்டன. கோவிலின் 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டன. இதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நாடு முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது.

பத்மநாபசுவாமி கோவில் சம்மந்தமான 2 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பது கேரள அரசின் கீழ் வரக்கூடிய தேவஸ்சம் போர்டா அல்லது மன்னர் குடும்பமா என்பது குறித்தானது.

இந்த வழக்கின் இடைக்கால கோரிக்கையாக கோவிலில் உள்ள ஆறாவது அறையை திறக்க கூடிய வழக்கு. இவை அனைத்தும் சேர்த்து ஒரே வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது அதன் தீர்ப்பில், மிக முக்கியமானதாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம் என தெரிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிலவறைகளில் உள்ள பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கணக்கிட ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டபோராட்டத்திற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.