உத்தரபிரதேச மாநிலம் சித்ரகோட் மாவட்டத்தில் உள்ள தேவ்கலி கிராமத்தை சேர்ந்தவர் மயங்க் குமார் (வயது 35). இவரது மனைவி குசம் தேவி (வயது 24). போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் மயங் குமார், பிஜ்னூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்ததால் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாயங்குமார் வீட்டுக்கு வந்தார். இதற்கிடையில் மயங் குமாருக்கும், அவரது மனைவிக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மயங்கிற்கும், தேவிக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தேவி நேற்று இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த மயங்க் துக்கம் தாங்க முடியாமல் தான் வைத்திருந்த அரசு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப சண்டையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.