சிவகங்கை நாட்டாக்குடியில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் கோவையில் டீக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலில் சேர்ந்த மஞ்சு என்ற 25 வயது பெண்ணை திருமணம் செய்த் இருவருக்கும் முனீஸ்வரன் என்ற 4 மாத குழந்தை இருந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மே 20ம் தேதி சொந்த ஊரான நாட்டக்குடிக்கு சென்றதில் திடீரென குழந்தை இறந்ததாக கூறி அவர்களது குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சம்பவத்தன்று மனைவி மஞ்சு தனது குழந்தையுடன் சிவகங்கை சென்றதாக கணவர் கூறினார். திரும்பி வரமாட்டேன் எனக்கூறியதுடன் குழந்தையை நாட்டாக்குடி கட்டப்புலி கோயில் அருகே பையில் வைத்து விட்டு நாகர்கோவில் சென்று விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது குழந்தை சடலமாக இருந்ததைக் கூறினார். தனது தாயார் காளிமுத்து உடன் சேர்ந்து குழந்தையின் உடலை மயானத்தில் புதைத்ததாக சந்திரசேகரன் வாக்குமூலம் அளித்தார்.
குழந்தையை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. குழந்தை யாருக்கு பிறந்தது என்பது குறித்து கணவன் மனைவிக்குள் சந்தேகமும், சண்டையும் தொடர்ந்தது.
இதனால் கணவனும் மனைவியும் சேர்ந்து குழந்தையை தரையில் தூக்கி போட்டு கொலை செய்துள்ளனர். சந்திரசேகர், அவரது மனைவி மஞ்சு அவரது தாய் காளிமுத்து மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.