சிரித்து பேசினார்… அடுத்த சில நிமிடங்களில் 6வது மாடியிலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை!!

792

கேரளா……..

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜார்ஜாவில் 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுமேஷ், எலக்ட்ரிக்கல் என்ஜினியரான சுமேசுக்கு கடந்தாண்டு ஐக்கிய அரபு எமீரகத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஜார்ஜாவில் பணியாற்றிவந்த சுமேஷ், அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று பக்ரீத் பண்டிகை என்பதால் வீட்டில் பிரியாணி சமைத்துள்ளனர்.

நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு சிரித்து விளையாடிய சுமேசுக்கு போனில் அழைப்பு வந்துள்ளது. பேசிக் கொண்டிருந்த போதே, போனை தூக்கி எறிந்ததுடன் சில நிமிடங்களில் 6 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


இதை சற்றும் எதிர்பாராத அவரின் நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர், உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த அதிகாரிகள் சுமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சுமேசுக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்ததாகவும், அதைப்பற்றி அடிக்கடி கவலையுடன் இருப்பார் எனவும் அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா ஊரடங்கால் வருடாந்திர விடுமுறைக்கு சுமேசால் சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் போனதும் தெரியவந்துள்ளது.