சிறுமிகளுடன் ஆபாச பார்ட்டி… சிக்கிய பத்திரிகை உரிமையாளர்: குடியிருப்பில் பொலிசார் கண்ட காட்சி!!

801

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ததுடன் ஆபாச பார்ட்டி ஒன்றையும் முன்னெடுத்த வழக்கில் தலைமறைவான உள்ளூர் பத்திரிகை உரிமையாளர் கைதாகியுள்ளார்.

தலைமறைவாக இருந்த பியாரெ மியான் என்ற இந்த நபர் தொடர்பில் தகவல் அளிப்பவர்களுக்கு 30,000 பணம் சன்மானமாக வழங்கப்படும் என பொலிஸ் தரப்பு அறிவித்திருந்தது.

ஜூலை 12 ஞாயிறு அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் போப்பாலில் ராத்திபாத் பகுதியில் 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகளை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பொலிசார் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி வலையில் சிக்க வைத்து துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியானது. மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் அளவுக்கும் அதிகமான போதை மருந்து பயன்படுத்தி இருந்துள்ளனர்.


அவர்களிடம் மேற்கொண்ட விரிவான விசாரணையில், உள்ளூர் பத்திரிகை உரிமையாளரான பியாரெ மியான் தங்களை இரவு பார்ட்டிக்கு அழைப்பு விடுத்ததாகவும், குளிர் பானத்தில் கலந்து மது அருந்த வைத்ததாகவும் சிறுமிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், அந்த பார்ட்டிக்கு நடுவே பலமுறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாகவும் சிறுமிகள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அன்றைய தினமே, பொலிசார் அந்த நபரின் போப்பாலில் அமைந்துள்ள குடியிருப்பை சோதனையிட்டுள்ளனர்.

அங்கிருந்து பல எண்ணிக்கையிலான ஆபாச பொம்மைகள், மருந்துகள், பல லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மது வகைகள் என பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இவரது நிறுவனத்தின் பெண் மேலாளர் ஒருவரே, சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி, பியாரெ மியான் குடியிருப்புக்கு அனுப்பி வைத்து வந்தவர்.

சிறுமிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே, இவர்கள் இரவு நேர பார்ட்டிகளை ஏற்பாடு செய்துள்ளனர். விசாரணை இறுகிய நிலையில், மியான் மற்றும் நண்பர்களும், அந்த மேலாளரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனிடையே, சிறுமிகளை மியான் மற்றும் அவரது நண்பர்கள் வெளிநாடுகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் முக்கிய பிரபலங்கள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தாய்லாந்து, பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்தில் சிறுமிகளுடன் மியான் பயணப்பட்டதன் ஆதாரங்களும் பொலிசாரிடம் சிக்கியுள்ளது.

தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதியில் இருந்து பியாரெ மியான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.