இந்தியா……
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 7 வயது சிறுமியை கடத்திச் சென்று துன்புறுத்த முயன்றதாக கூறப்பட்ட இளைஞரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தின் பானிபட் பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தவரான 28 வயது இக்லாக் என்பவரையே கை துண்டிக்கப்பட்ட நிலையில், ரயில் தண்டவாளமருகே கண்டெடுத்துள்ளனர்.
ரயில் தண்டவாளமருகே அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் தூக்கத்தில் இருந்த 7 வயது சிறுமியை குறித்த இளைஞர் வீடு புகுந்து கடத்தியுள்ளார்.
தொடர்ந்து ரயில் தண்டவாளமருகே ஆளில்லாத பகுதியில் சிறுமியை கொண்டு சென்று துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால் சிறுமி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் அப்பகுதியில் குவிந்துள்ளனர். இதனால் சிறுமியை விட்டுவிட்டு அந்த இளைஞர் மாயமாகியுள்ளார்.
இதன் அடுத்த நாளில், ரயில் தண்டவாளம் அருகே கை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரை மீட்டுள்ளனர்.
ஆனால் ரயிலில் அடிபட்டு கை துண்டானதாக பொலிசார் வழக்கை முடிக்க பார்ப்பதாக உறவினர்களும் நண்பர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.