சீதனமாகக் கொடுத்த சொம்பை விற்று மது அருந்திய கணவர் : ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்!!

204

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த விவசாயி நரசிங் யாதவ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி புஷ்பா தேவியுடன் வசித்து வந்த நரசிங் யாதவ், தனது இரண்டாவது மனைவியான விமலா பாசியை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

நரசிங் யாதவ் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலையா? தற்கொலையா? என பலரும் பலவிதமாக பேசிய நிலையில், முதல் மனைவி புஷ்பா, தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக உள்ளூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பின், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தபோது, ​​நரசிங் யாதவ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், நரசிங் யாதவின் இரண்டாவது மனைவி விமலா பாசி தனது கணவரை கழுத்தை நெரித்தது தெரியவந்தது. போலீஸ் அதிகாரி பிரதீப்குமார் கூறுகையில், ‘குடிப்பழக்கத்திற்கு அடிமையான நரசிங் யாதவ், சம்பவத்தன்று வீட்டில் இருந்த சொம்புகளை விற்று மது வாங்கினார்.

பின்னர் வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் இருந்த சோம்பாவை விற்றுவிட்டு மது அருந்தியதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். என்னுடைய அம்மா வீட்டில் சீதனமாகக் கொடுத்த சொம்பை விற்று மது அருந்தினாயா? என்று கூறி விமலா கணவனிடம் தகராறு செய்தார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் கணவரின் கழுத்தை நெரித்தார். விமலா தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்,” என்றார்.