சுயஉதவிக்குழுவால் பெருகிய கடன்.. பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

213

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு கிருத்திகா என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.

காதலித்து மண வாழ்க்கையில் இணைந்த இந்த தம்பதியருக்கு சாய் நந்தினி என்ற மகளும், கோகுல்ராஜ் என்ற மகனும் உண்டு. கிருஷ்ணமூர்த்தி ரைஸ் மில் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில், நந்தினி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் பலவற்றில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

மாதாந்திரச் சீட்டு, வாரச்சீட்டு என பல்வேறு வழிகளில் கடன் வாங்கியவர்கள், ஒரு கட்டத்தில் பணத்தை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு சென்ற நேரங்களில் கடன் கொடுத்தவர்கள் வீட்டின் வாசலுக்கு வந்து கிருத்திகாவிடம் தகராறு செய்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த கிருத்திகா விபரீதமுடிவை எடுத்தார். ஜூலை 23-ம் தேதி கணவர் ரைஸ் மில்லில் இரவு வேலைக்காக சென்றார். பின்னர் மறுநாள் 24-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் விட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு கிருத்திகா இவர்களுடன் 11 வயது மகள், 14 வயது மகன் என மூவரின் உடல்களும் தூக்கில் தொங்கியபடி கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் நேரில் விரைந்த மண்ணச்சநல்லூர் போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக கிருத்திகா, குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்ததாக தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தைக் காப்பாற்றுவதே தமது பொறுப்பு என காத்திருந்த கிருஷ்ணமூர்த்தி, மனைவி, பிள்ளைகளை பறிகொடுத்து நிர்க்கதியாய் நிற்பது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.