சுஷாந்த் சிங்கின் மேனேஜர் கர்ப்பமா? அவிழாத மர்ம முடிச்சுகள்! அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் தகவல்!!

892

இந்திய திரையுலகில் பல நாட்களாக பலராலும் உச்சரிக்கப்பட்டு வரும் ஒரு பெயர் என்றால் அது சுஷாந்த் சிங்.

இவரின் மரணத்திற்கு மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் இதில் இருக்கும் மர்மங்கள் இன்றும் முடிச்சுக்குள் முடிச்சு என நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அவரிடம் மேனேஜராக பணிபுரிந்த திஷா சாலியன் என்ற பெண் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த செய்தி காட்டுத் தீ போல திரையுலகில் பரவி வந்த நிலையில் ஓரிரு நாட்களிலேயே சுஷாந்த் சிங்கும் தற்கொலை செய்து கொண்டார்.


மேனேஜர் திஷா நடிகர் சூரஜ் பஞ்சோலி என்பவருடன் பல வருடங்களாக காதலில் இருந்ததாகவும் இதன் காரணமாக திஷா கர்ப்பம் அடைந்ததாகவும் விஷயம் யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என சூரஜ் திஷாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் திஷா இதை யாரிடமும் பகிராமல் தனது நெருங்கிய நண்பரான சுஷாந்த் சிங்கிடம் மட்டும் பகிர்ந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த விஷயத்தை அறிந்த சுஷாந்த் சிங் சரியான நேரத்தில் இந்த விஷயத்தை வெளிகொண்ட வர இருந்ததாகவும் ஆனால் சூரஜ் சுஷாந்த் சிங்கை மிரட்டியதாகவும் அதனால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் திஷா தற்கொலை செய்து கொண்டபோது கர்ப்பமாக இருந்ததாகவும் அந்த கர்ப்பத்திற்கு நடிகர் சூரஜ் பஞ்சோலி தான் காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் சூரஜ் இதற்கு முன் ஜியாகான என்ற நடிகையுடன் காதலில் இருந்ததாகவும் அதன் காரணமாக ஜியாகான் கர்ப்பம் அடைந்ததாகவும் அந்த குழந்தையை வளர்க்க சூரஜ் மறுத்ததால் கடுமையான வேதனையில் இருந்த ஜியாகான் சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகளில் சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது திஷாவின் தற்கொலை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு சுஷாந்த் சிங்கின் மரணத்தில் உள்ள பல்வேறு மர்ம முடிச்சுகளுக்கு பின்பும் பாலிவுட் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் உள்ளதாகவும்,

காவல்துறை இதை சரியான வகையில் கையாண்டால் பல உண்மைகள் வெளிவரும் என சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.