காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைக்காததால் பெண்கள் மீது ஆசிட் வீசிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இந்த பணியை பெண்களும் செய்ய தொடங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியே.
நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு பெண் பிரேக்கப் செய்த தனது காதலனை பழிவாங்க வேண்டும் திட்டமிட்டார். இதற்காக காதலனை வரவழைத்து அவருக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
அவரது முன்னாள் காதலனும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து அந்த சூப்பை ரசித்து ருசித்து குடித்துள்ளார். இதனால் சிறிது நேரத்தில் 5 பேரும் உயிரிழந்தனர்.
உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் விசாரணையை முதலில் தொடங்கினர். அதன்பிறகு தான் உண்மை தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.