செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம்பெண்!!

99

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது மை டாலா என்ற பிரசித்தி பெற்ற ஏரி.

இந்த ஏரியில் நேற்று விடுமுறை நாளானதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குளித்து இயற்கையை ரசித்து வந்தனர் பலர் பாறைகளுக்கு இடையே நின்று கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் துமகூரு மாவட்டம் குப்பி தாலுக்கா ஷிவரனாபுரா கிராமத்தில் வசித்து வரும் சோம்நாத் என்பவரின் மகள் ஹம்சாவும் ஏரிக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.

பல பாறைகளுக்கு இடையே நின்று இளம் பெண் நேற்று மாலை நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி ஏரிக்குள் விழுந்து பாறைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டார்.

அலறி கூச்சலிட்டத்தில் நண்பர்கள் அப்பகுதியில் குளித்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை மீட்க மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேர மீட்பு பணி போராட்டத்திற்குப் பிறகு இன்று பிற்பகல் சுமார் 2 மணிக்கு பத்திரமாக மீட்டனர்.