செல்ஃபி மோகத்தால் இரண்டு இளம் பெண்கள் செய்த காரியம்! நொடிப் பொழுதில் எல்லாம் தலைகீழாய் மாறிய பரபரப்பு காட்சி!!

1058

மத்தியப்பிரதேசத்தில் உள்ள பெஞ்ச் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு ஊரடங்கு அமலில் உள்ளதை பொருட்படுத்தாமல் இளம் பெண்கள் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர்.

அவர்களுள் செல்பி எடுப்பதற்காக ஆற்றில் இறங்கிய 2 இளம்பெண்கள் நடுவில் இருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டனர்.


இதனிடையே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சிறிது நேரத்தில் பாறை மூழ்கும் அளவுக்கு அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது.

இதனைக் கண்டு பயந்து போன மற்ற பெண்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின்படி உடனடியாக அங்கு வந்த மீட்பு படையினர் கயிற்றைக் கட்டி ஆற்றில் இறங்கி பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.