பீகார் மாநிலத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் . 21 வயதாகும் இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு விடுதியில் தங்கியுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து செல்போனை கேட்டு கத்தியை காட்டி மிரட்டியது.
ஆனால் அவர் தன்னுடைய செல்போனை கொடுக்க மறுத்ததால் அவர்கள் கத்தியால் இளைஞரை குத்திவிட்டு செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிஓடி விட்டனர்.
யாரும் உதவிக்கு வராததால் ரத்தம் சொட்ட சொட்ட தான் தங்கி இருக்கும் அறைக்கு அவர் நடந்து சென்றார். அங்கிருந்த வட மாநில தொழிலாளர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறது.