உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். 33 வயதான பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
பிரியா என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த மோஹித், கடந்த 2023 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.
தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஓட்டல் அறையில் மோஹித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக, அவர் வெளியிட்ட வீடியோவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மனைவி பிரியா மற்றும் அவரது பெற்றோர் உட்பட குடும்பத்தினர் தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பி வந்ததாக மோஹித் குற்றம் சாட்டியுள்ளார்.