கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா. இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்த நிர்மலா, நேற்று மாலை வழக்கம்போல் பால் ஊற்றுவதற்காக அருகில் உள்ள பால் சேகரிப்பு மையத்திற்கு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், நிர்மலா வீட்டின் அருகே உள்ள சோலை வனப்பகுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது நிர்மலா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சின்னசேலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று நிர்மலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.