ஜேர்மனியில் தடைசெய்யப்பட்ட மர்ம பொருட்களுடன் பொலிஸாரிடம் சிக்கிய சுவிஸ் இளைஞர்!!

320

ஜேர்மனியில் தடைசெய்யப்பட்டுள்ள கஞ்சா பொருட்களுடன் சுவிஸ் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

குறித்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீரியம் குறைந்த கஞ்சாவானது சுவிஸில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அது ஜேர்மனியில் பயன்படுத்துவதும் கைவசம் வைத்திருப்பதும் குற்றமாகும்.

லார்ராக்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜேர்மன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 24 வயது சுவிஸ் இளைஞர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.


ரைன் நதிக்கரையில் வைத்து குறித்த இளைஞர் கஞ்சா புகைத்ததாகவும், அவரை சோதனையிட்டபோது அதிக அளவிலான கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் சனிக்கிழமை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வீரியம் மிகவும் குறைவான கஞ்சா பொருட்களையே தாம் பயன்படுத்தியதாக வாதிட்ட இளைஞருக்கு, சுவிஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் 5 மடங்கு குறைவான வீரியம் கொண்ட கஞ்சா பொருட்களே ஜேர்மனியில் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 வயதான அந்த சுவிஸ் இளைஞர் தற்போது போதைப்பொருட்களை ஜேர்மனிக்கு எடுத்துச் சென்றதாகவும் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகவும் கூறி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ளார்.